5 ஏக்கர் இடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு
மன்னார்குடியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைய உள்ள 5 ஏக்கர் இடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் மதுக்கூர் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை நகராட்சி வழங்கி உள்ளது. ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் கட்டுவதற்காக 5 ஏக்கர் இடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைய உள்ள இடத்தை நேற்று முன்தினம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட நீதிபதி சாந்தி, மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, நகராட்சி தலைவர் சோழராஜன் உள்பட பலர் உடனிருந்தனர். இங்கு குடும்பவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.