நான்கு வழி சாலை பணிநான்கு வழி சாலை பணி
தமிழக நெடுஞ்சாலை துறையின் திருப்பூர் கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மாநில நெடுஞ்சாலையான பல்லடத்தில் இருந்து-தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தெரிச்சல் வரை 11.80 கிலோமீட்டர் நீளம் கொண்ட இருவழி சாலையை ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகள் குறித்து சில அறிவுரைகளையும் வழங்கினார். ஆய்வின்போது திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, திருப்பூர் தரகட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.