கட்டுமான நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கட்டுமான நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

Update: 2022-07-09 13:48 GMT

கோவை, ஜூலை

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் என்ஜினீயர் சந்திரசேகர். கடந்த 6-ந்தேதி இவருடைய வீடு மற்றும் உறவினர் வீடு, நிறுவனங்கள் உள்பட 6 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடந்தது.

இது தவிர அவருக்கு சொந்தமான, அவர் நிர்வாக இயக்குனராக உள்ள கோவை பீளமேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக அந்த நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது.

மேலும் கோவை கொடிசியா அருகில் உள்ள அந்த நிறுவனத்தின் மற்றொரு நிர்வாக இயக்குனர் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அங்குள்ள நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ் மற்றும் அலுவலர்களிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்