குமரியில் பலத்த மழை: கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. மழை பதிவானது.

Update: 2022-12-03 19:38 GMT

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 48.6 மி.மீ. மழை பதிவானது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதே போல் நேற்றும் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தில் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 48.6 மில்லி மீட்டர். மழை பதிவானது. இதே போல மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி-10.2, கன்னிமார்-7.4, கொட்டாரம்-2.6, மயிலாடி-7.2, நாகர்கோவில்-11.2, புத்தன்அணை-2.8, சுருளகோடு-26.2, தக்கலை-28.3, குளச்சல்-44.8, இரணியல்-10.2, பாலமோர்-7.2, திற்பரப்பு-24.2, ஆரல்வாய்மொழி-21, அடையாமடை-5, முள்ளங்கினாவிளை-32.6, ஆனைகிடங்கு-6 என்ற அளவில் மழை பெய்தது. மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-5.8, பெருஞ்சாணி-4.2, சிற்றார் 1-6.2, மாம்பழத்துறையாறு-7, முக்கடல்-9.7 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தண்ணீர் வரத்து

மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 880 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல் பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 320 கனஅடி தண்ணீர் வருகிறது. சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 172 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 1 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 594 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்