குளச்சலில் 'நம்மை காக்கும் 48 திட்டம்' வாகன பிரசாரம்

குளச்சலில் ‘நம்மை காக்கும் 48 திட்டம்' வாகன பிரசாரம் நடந்தது.

Update: 2022-08-27 18:37 GMT

குளச்சல், 

குளச்சலில் 'நம்மை காக்கும் 48 திட்டம்' வாகன பிரசாரம் நடந்தது.

வாகன பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல் சார்பில் 'நம்மை காக்கும் 48 திட்டம்' விளக்க வாகன பிரசாரம் தொடக்க விழா குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் தொடங்கியது. குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நம்மை காக்கும் 48 திட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சைக்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும்.

இதனால் பாதிக்கப்படுபவர் உயர் சிகிச்சை கிடைக்கப்பெற்று காப்பாற்றப்படுவர். அடுத்ததாக 'நல்ல சமாரியன் சட்டம்' வாயிலாக விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க செய்பவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என பேசினார்.

இதில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, மகளிர் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பால செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாகன பிரசாரம் காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு, பீச் சந்திப்பு, பள்ளி முக்கு சந்திப்பு வழியாக மீண்டும் அண்ணாசிலை சந்திப்பு வந்தடைந்தது. தொடர்ந்து வாகன பிரசாரம் குளச்சல் சப்-டிவிசனுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்