ரூ.46¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.46¼ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தல்
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடைமை மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த உடைமையை சோதனை செய்தனர். அப்போது அதில் கம்பிகள் மற்றும் சங்கிலிகள் போன்று மறைத்து ரூ.46 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான 826 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், தஞ்சாவூரை சேர்ந்த அஷ்ரப் அலி(வயது 48) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.