பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-11 20:26 GMT

பட்டுக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் அரிசி பதுக்கல்

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கண்டியங்காடு பஸ் நிறுத்தம் அருகில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.அதன் பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

450 கிலோ ரேஷன்அரிசி

அப்போது அங்கு மூட்டைகளில் 450 கிலோ ரேஷன்அரிசி, 450 கிலோ குருணை அரிசி என மொத்தம் 900 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து அரிசி, குருணை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் இது தொடர்பாக பாப்பாநாட்டை சேர்ந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்