விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம்
ஏலகிரி மலையில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையில் கொட்டையூர் அருகில் ஏலகிரி மலை போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் தலைமையில் போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியதது உள்ளிட்டவைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 45 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.