ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி
வாசுதேவநல்லூர் அருகே ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள முள்ளிக்குளம் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.45 லட்சம் மதிப்பில் முள்ளிக்குளம் முதல் நகரம் வரை தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முள்ளிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் ரமேஷ், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவி பொறியாளர் அருள் நாராயணன், ஓவர்சியர் முத்துமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.