ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி

பேட்டையில் ரூ.45 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்;

Update: 2023-02-18 20:33 GMT

பேட்டை:

தமிழக அரசின் 14-வது நிதி குழு திட்டத்தின் கீழ் நெல்லை பேட்டை 22-வது வார்டுக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜூ, திட்ட இளநிலை பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் பட்டுராஜ், அவைத் தலைவர் வி.கே.முருகன், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்