குமரியில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா

குமரியில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-11 18:45 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் மொத்தம் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது அகஸ்தீஸ்வரம் பகுதியில் 4 பேர், குருந்தன்கோடு-5, முன்சிறை-8, நாகர்கோவில்-8, ராஜாக்கமங்கலம்-8, திருவட்டார்-4, தோவாளை-3, தக்கலை-4 என மொத்தம் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களில் முக கவசம் அணியும்படி சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்