44 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

44 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update:2022-10-27 21:00 IST

நாட்டறம்பள்ளி வட்டத்தில் உள்ள புத்தகரம், மல்லப்பள்ளி, திரியாலம், சொக்கலாம்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் வசித்து வரும் 44 குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து அதற்கான வீட்டு மனை பட்டா வழங்கி அந்த குடும்பங்களுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இலவச வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் கவுரி, மற்றும் திரியாலம் கிராம நிர்வாக அலுவலர் அருணா உள்ளிட்ட கிராம நிர்வாக நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்