வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 431 பேர் எழுதினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை 431 பேர் எழுதினர். தேர்வு மையங்களை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

Update: 2023-09-10 16:50 GMT

வட்டார கல்வி அலுவலர் பணி

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இந்ததேர்வுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 527 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு ராணிப்பேட்டை எல்.எப்.சி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 247 நபர்களும், ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 280 நபர்களும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் காலை 9 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

431 பேர் எழுதினர்

ராணிப்பேட்டை எல்.எப்.சி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 203 நபர்களும், ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 228 நபர்களும் என மொத்தம் 431 நபர்கள் நேற்று தேர்வு எழுதினார்கள். 96 நபர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தேர்வு மையங்களை கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்