வெண்ணாற்றில் 4,300 கன அடி தண்ணீர் திறப்பு

கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் 4,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-05-31 20:19 GMT

திருக்காட்டுப்பள்ளி

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 24-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் இங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் கடந்த 27-ந் தேதி தண்ணீர் திறந்த விடப்பட்டது.

ஆனால், கல்லணை கால்வாயில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி மற்றும் வெண்ணாற்றில் முழு அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரி, வெண்ணாற்றில் இருந்து பிரியும் கிளை ஆறுகளில் நடைபெறும் பணிகள் முழுமையாக முடிவடையாததே இதற்கு காரணமாகும்.

தண்ணீர் திறப்பு

இதற்கிடையே கல்லணையில் இருந்து 5-வது நாளாக கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால், காவிரி ஆற்றில் 3,503 கன அடியும், வெண்ணாற்றில் 4,300 கன அடியும், கொள்ளிடத்தில் 822 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கல்லணை தலைப்பு பகுதியில் உள்ள பிள்ளை வாய்க்கால், ஆனந்த காவிரி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை.




Tags:    

மேலும் செய்திகள்