கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 43 பேருக்கு அபராதம்
கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறிய 43 பேருக்கு அபராதம்
கோத்தகிரி
கோத்தகிரி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பிலிப் சார்லஸ் தலைமையில் போலீசார் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் செல்லும் சாலைகளில் வாகனத் தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை இயக்கியவர்கள் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு 18 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை.எடுத்தனர்.
இதே போல ரோந்துப் பணி சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மேற்கொண்ட வாகன சோதனையில் விதிகளை மீறிய 23 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யபட்டு, அவர்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 43 வாகன ஓட்டிகளுக்கு 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.