தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-30 13:05 GMT

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

அனல்மின்நிலையம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்பட மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தன. கடந்த சிலநாட்களாக முழு வீச்சில் மின்சார உற்பத்தி நடந்து வந்தது.

பாதிப்பு

இந்த நிலையில் திடீரென 2 மின்உற்பத்தி எந்திரங்கள் திடீரென பழுதடைந்து உள்ளது. அதன்படி 1-வது மின்உற்பத்தி எந்திரம், 5-வது மின் உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனல்மின்நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் பழுது நீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்