மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்திய 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்திய 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-12 18:36 GMT

அரக்கோணம்

மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்திய 42 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம் ரெயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் விதமாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ரெயில்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூருவில் இருந்து வரும் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் ஷெரிப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் உஸ்மான் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வின்ஸ்டன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் தீவிர சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு மைசூருவில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. தயாராக இருந்த ரெயில்ேவ பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்த போது சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசி 42 மூட்டைகளில் அடுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்