காரில் கடத்தி வந்த 42 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

பரமக்குடி அருகே காரில் கடத்தி வந்த 42 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-15 18:59 GMT

பரமக்குடி,

மதுரை எல்.டி.பி.நகரை சேர்ந்த குமார் (வயது 43). மதுரை பழங்காநத்தம் முத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (25) ஆகிய இருவரும் பரமக்குடி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசிகளை வாங்கி அவர்களது காரில் 42 மூட்டைகளை மதுரைக்கு கொண்டு சென்றனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் எமனேஸ்வரம் போலீசார் அவர்களை மடக்கி அரிசி மூடைகளை பறிமுதல் செய்து 2 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்