கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது..!

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 10 மாவட்டங்களில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2023-05-15 08:27 GMT

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், மாநகர் காவல் ஆணையர்கள், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 150 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 260 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதுவரை 8,748 லிட்டர் கள்ளச்சாரயம் மற்றும் 4,720 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக டிஜிபி அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



Full View


Tags:    

மேலும் செய்திகள்