404 ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பெற நீலகிரியில் 404 ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-07-19 20:30 GMT

ஊட்டி

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை பெற நீலகிரியில் 404 ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத்ெதாகை

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்ெதாகை திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம்கள், 2 கட்டமாக நடைபெற உள்ளது.

இங்குள்ள 404 ரேஷன் கடைகளில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 473 கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 204 ரேஷன் கடைகளில் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 4-ந் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மீதமுள்ள 200 ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் முகாம் நடைபெற உள்ளது.

டோக்கன் வினியோகம்

இதற்காக 631 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் மற்றும் 120 ரிசர்வ் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ரேஷன் கடை பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் விண்ணப்பிக்க வர வேண்டிய நாள், இடம் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிட்டு வீடு, வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் வர இயலாத பொதுமக்கள் இறுதி 2 நாட்களில் விண்ணப்ப படிவங்களை வழங்கலாம்.

வாகன வசதி

இந்த பணிகளை கண்காணிக்க 404 முகாம் பொறுப்பு அலுவலர்கள், 81 மண்டல அலுவலர்கள், 27 கண்காணிப்பு அலுவலர்கள், 6 வட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 19 மாவட்ட நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பழங்குடியின மக்களை அழைத்து வர தேவைப்படும் இடங்களுக்கு வாகன வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்