400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் டிரைவர் கைது

Update: 2022-11-29 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையிலான போலீசார், திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 50 கிலோ எடை கொண்ட 8 சாக்கு மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ்(வயது 40) என்பதும், திண்டிவனம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்