400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தடையை மீறி விற்பனைக்கு வைத்திருந்த 400 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-07-19 16:10 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, கீதா, மேற்பார்வையாளர்கள் சிங்கராஜ், பாண்டித்துரை, சதீஷ், முருகேசன் ஆகியோர் அதிரடியாக அந்த கடைக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அட்டை பெட்டிகளில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் இருந்தன. இதையடுத்து அந்த கடையில் இருந்து மொத்தம் 400 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்