சிறுவர்கள் ஓட்டிவந்த 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
அரியலூரில் சிறுவர்கள் ஓட்டிவந்த 40 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் நகரில் உள்ள அனைத்து சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த வாகன சோதனையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்களிடம் இருந்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட இந்த இருசக்கர வாகனங்கள் அரியலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை ஓட்டிவந்த சிறுவர்களின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்படும் என்றும், அபராதமாக ரூ.ஆயிரம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.