எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 40 பேர் கைது
எடப்பாடி பழனிசாமிக்கு கருப்பு கொடி காட்டிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் வந்தார். திருச்சி மாவட்டம் தம்மம்பட்டி, உப்பிலியபுரம், துறையூர் டோல்கேட் வழியாக வந்து கொண்டிருந்தார். துறையூர் பிரிவு ரோடு ரவுண்டானாவில் எடப்பாடி பழனிசாமி வந்தபோது,
ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு தலைமையில் சுமார் 50 பேர் கருப்பு கொடி காண்பித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பு கொடி காட்டிய 40 பேரை கைது செய்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் துறையூரில் பரபரப்பு ஏற்பட்டது.