40 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
நெல்லை மாவட்டத்தில் 40 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று உள்ளனர்.
தமிழக காவல்துறையில் 25 ஆண்டுகள் பணி பூர்த்தியான தலைமை காவலர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல் நெல்லை மாவட்டத்தில் 40 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பதவி உயர்வு பெற்ற 40 பேரும் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.