சிறப்பு முகாம்களில் ரூ.40 லட்சம் வரி வசூல்
நெல்லை மாநகராட்சியில் நடந்த சிறப்பு முகாம்களில் ரூ.40 லட்சம் வரி வசூலானது.;
நெல்லை மாநகராட்சி ஆணையாவர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி வார்டு வாரியாக சனிக்கிழமை தோறும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மண்டலம் 21-வது வார்டு பேட்டை உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற முகாமை மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தச்சநல்லூர் மண்டலத்தில் 29-வது வார்டுக்கு மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடைபெற்றது. இதில் உதவி ஆணையாளர் கிறிஸ்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாளையங்கோட்டை மண்டலத்தில் 55-வது வார்டு விக்ன விநாயகர் கோவில் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாநகாரட்சி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதில் உதவி வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் 31-வது வார்டுக்கு புனித தோமையார் பள்ளியில் முகாம் நடைபெற்றது. இதில் உதவி ஆணையாளர் காளிமுத்து, நிர்வாக அலுவலர் மாரியப்பன், உதவி வருவாய் அலுவலர் அருணாசலம், கண்காணிப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாம்களில் புதிய சொத்து வரி விதிப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, இரட்டை வரி விதிப்பு நீக்கம், காலி மனை வரி விதிப்பு ரத்து உள்பட 69 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது 1 வாரத்துக்குள் தீர்வு காண ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார். 4 மண்டலங்களிலும் நடைபெற்ற 4 முகாம்கள் மூலம் ரூ.40 லட்சத்து 331 வரி வசூலானது.