கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-20 18:19 GMT

புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணேஷ் நகர் பகுதியில் வண்டிபேட்டை வாட்டர் டேங்க் அருகே கஞ்சா விற்பனை செய்த தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக் (வயது 23), திருச்சி காந்திமார்க்கெட்டை சேர்ந்த வடிவேல் (24), புதுக்கோட்டை சந்தை பேட்டையை சேர்ந்த நாகராஜன் (26), திருவரங்குளம் தோப்பு கொல்லை முகாமை சேர்ந்த பிரசாந்த் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.19,500 ஆகியவற்றை பறிமுதல் செய்து கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்