மின்பிடி தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி தாக்குதல் 4 வாலிபர்கள் கைது

சின்னசேலத்தில் மின்பிடி தொழிலாளியை ஆட்டோவில் கடத்தி தாக்குதல் 4 வாலிபர்கள் கைது

Update: 2022-12-19 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே புக்கிரவாரி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராம்கி(வயது 26). இவரும் அதே ஊரை சேர்ந்த பொன்னுசாமி மகன் வெங்கடேசன் மற்றும் சிறுமங்கலம் கிராமம் சக்திவேல் மகன் முத்துசாமி ஆகிய 3 பேரும் கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன் பிடி வேலைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கடந்த 18-ந் தேதி இரவு சொந்த ஊருக்கு வருவதற்காக மங்களூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு சின்னசேலம் அருகே உள்ள சிறுமங்கலம் கிராமம் ஸ்ரீதர் மகன் ராஜ்பாபு, செல்வம் மகன் கருப்புமணி ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த ராம்கி உள்ளிட்ட 3 பேரும் அவர்களை சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து ரெயில் மற்றும் பஸ் மூலம் சின்னசேலம் பஸ்நிலையத்தில் உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் திடீரென ராம்கியை ஆட்டோவில் கடத்தி சென்று திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறி்து ராம்கி கொடுத்த புகாரின் பேரில் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று தாக்கிய கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பாபு மகன் அப்பாஸ்(23) இந்திரா நகர் சங்கர் மகன் மணி(23) கள்ளக்குறிச்சி காந்தி ரோடு செல்வராஜ் மகன் அருண் (26) கள்ளக்குறிச்சி விழந்தாங்கல் ரோடு ஜீவானந்தா மகன் வினோத்குமார்(19) ஆகிய 4 பேரையும் கைது செய்து ராம்கியை கடத்தி சென்று தாக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்