மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

பொள்ளாச்சி அருகே மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2022-09-30 18:45 GMT


பொள்ளாச்சி அருகே மூதாட்யை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பலாத்காரம் செய்ய முயற்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 91 வயதான மூதாட்டி வீட்டின் ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி இரவு 11 மணிக்கு திடீரென்று அந்த மூதாட்டி அதிக சத்தத்துடன் அலறினார்.

உடனே வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த மைதீன் (வயது 21) என்பவர், மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார். அவர், உறவினர்களை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்.

வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

இது குறித்த புகாரின்பேரில் பொள்ளாச்சி மேற்கு போலீசார் பலாத்காரம் செய்ய முயற்சி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியை மைதீனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, குற்றம் சாட்டப்பட்ட மைதீனுக்கு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பிரிவுக்கு 2 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும், பலாத்காரம் செய்ய முயன்ற பிரிவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அவர், தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார், மைதீனை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்