புலி தாக்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு - ஊட்டியில் பரபரப்பு

ஊட்டி அருகே புலி தாக்கி அசாம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-10 09:11 GMT

ஊட்டி ,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இன்று மதியம் சுமார் 12.00 மணியளவில் அரக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிறுமியை வனவிலங்கு தாக்கி இழுத்து சென்றதாக வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், விரைந்த வந்த வனத்துறையினர் படுகாயத்துடன் கிடந்த நிஷாந்த் என்பவரது மகள் சரிதா(வயது4) என்ற சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கெனவே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியதில் சிறுமியை சிறுத்தை அல்லது புலி தாக்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்