லாரியில் கடத்த முயன்ற 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் 4¾ டன் ரேஷன் அரிசி கடத்தி முயன்ற டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-26 18:45 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி.காமினி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுகள் சக்திவேல், வேணுகோபால், கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் காரிமங்கலம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் 94 மூட்டைகளில் 4,700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது அவர்கள் தர்மபுரி அருகே உள்ள சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 32), கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகன் (42), காரிமங்கலத்தை சேர்ந்த சம்பத்குமார் (44) என்பதும், லாரியில் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்