தக்கலை அருகே கேரளாவுக்கு வாகனத்தில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே கேரளாவுக்கு வாகனத்தில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-07-15 22:10 GMT

தக்கலை:

கல்குளம் வட்டவழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான ஊழியர்கள் பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ே்வகமாக வந்த வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் வாகனம் வேகமாக சென்றது. உடனே அந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். அப்போது தோட்டியோடு பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை கேராளவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரி சுனில்குமார், அரிசியை உடையார்விளை அரிசி குடோனுக்கும், வாகனத்தை தக்கலையில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தார்.

--

Tags:    

மேலும் செய்திகள்