4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார்

கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயாராக உள்ளது.

Update: 2023-05-23 23:00 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா 4½ ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பேரூராட்சியில் 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கு 4 டன் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இயற்கை உரத்தை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் 4 டன் இயற்கை உரம் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.இதுகுறித்து கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறும்போது,

கோத்தகிரி நகரை குப்பை இல்லாத நகரமாக மாற்றவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பேரூராட்சி நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். கோத்தகிரி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகள் அனைத்தும் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யபடுகிறது. தற்போது 4 டன் இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதற்கு முன்பு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விவசாயிகள் நலன் கருதி இயற்கை உரம் கிலோவுக்கு ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் இயற்கை உரத்தை வாங்கி பயனடையலாம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்