4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி 3 பேர் யாத்திரை சென்றனர்.

Update: 2023-07-27 13:04 GMT

வந்தவாசி

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரத்துக்கு 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி 3 பேர் யாத்திரை சென்றனர்.

யாத்திரை

மத்திய பிரதேச மாநிலம் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோகோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்திலும், உலக நன்மை வேண்டியும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தபடி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி அவர்களுடைய யாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி பகுதியில் இருந்து தொடங்கியது.

வந்தவாசி வந்தனர்

3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்தபடி ராமேஸ்வரம் நோக்கி பாத யாத்திரையாக செல்கின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதிக்கு வந்தனர். வந்தவாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

4 ஆயிரம் கிலோ மீட்டர்

உலக நன்மைக்காகவும், கொரோனா தாக்கத்தில் இருந்து அனைவரும் விடுபடவும் சாஸ்தான நமஸ்காரம் லோக கல்யாண யாத்திரையாக செல்கிறோம்.

அதன்படி உத்தரகாண்ட் மாநிலம் கங்கோதரி முதல் ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் தெர்மாகோல் போட்டு படுத்து எழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு செல்கிறோம்.

ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிலோமீட்டர் வரை தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து எழுந்து சென்று யாத்திரையாக செல்கிறோம் என்றனர்.

வந்தவாசியில் அவர்கள் சாலையில் ஊா்ந்தபடி யாத்திரையாக சென்றதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்