காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 4 ஆயிரத்து 356 பேர் எழுதினர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 4 ஆயிரத்து 356 பேர் எழுதினர்.

Update: 2022-12-05 10:30 GMT

கிராம உதவியாளர் தேர்வு

காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 59 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் தாசில்தார்கள் மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.

அந்த வகையில் காஞ்சீபுரத்தில் 3 தேர்வு மையங்களும் வாலாஜாபாத் வட்டத்தில் 3 தேர்வு மையங்களும் உத்திரமேரூரில் 2 தேர்வு மையங்களும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஒரு தேர்வு மையமும் குன்றத்தூர் வட்டம் சார்பாக ஒரு தேர்வு மையம் என 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

4 ஆயிரத்து 356 பேர் தேர்வு எழுதினர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுத 5 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்திருத்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 356 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களுக்கான சதவீதம் 76.9 சதவீதம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்