துரைப்பாக்கம் பகுதியில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் போக்குவரத்து மாற்றம்
துரைப்பாக்கம் பகுதியில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.;
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலை சிக்னல் சந்திப்பில் இருந்து கார்ப்பரேசன் சாலை சந்திப்பு சிக்னல் வரை சுமார் 550 மீட்டர் தூரம் வரை உள் மற்றும் வெளி செல்லும் சாலைகளில் வருகிற 28 மற்றும் 4, 18, 25 (ஞாயிற்றுக்கிழமைகள்) ஆகிய தினங்களில் அதிகாலை 2 மணி முதல் 11 வரையில் 'மகிழ்ச்சி தெரு' நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
எனவே இந்த நிகழ்ச்சிகளின் போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியை சுற்றி போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.