ஓசூரில் அரசு பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமெண்டு பூச்சு-விழுந்து 4 மாணவர்கள் காயம்

Update: 2022-11-07 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரதியார் நகரில் மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்ல தயாராகினர். அப்போது 1-வது வகுப்பறையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு திடீரென மாணவர்கள் மீது விழுந்தது. இதில் வகுப்பறையில் இருந்த 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அரசு பள்ளியில் மேற்கூரை சிமெண்டு பூச்சு விழுந்து 4 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்