சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம் வழியாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-11-15 22:30 GMT

சூரமங்கலம்:

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 24-ந் தேதியும் நான்டெட் -கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07129) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நான்டெட்டில் இருந்து நாளை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் இரவு 12.37 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம் வழியாக வருகிற 19-ந் தேதி மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும்,

மேலும் கொல்லம் -செகந்தராபாத் சிறப்பு ெரயில் (வண்டி 07130) வருகிற 19-ந் மற்றும் 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் அதிகாலை 3.23 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 3.25 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர் வழியாக மறுநாள் இரவு 12.30 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இதேபோல் ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் (07131) வருகிற 21, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் நரசபூரில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 8.07 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இரவு 7.35 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் கொல்லம் - நரசபூர் சிறப்பு ெரயில் (வண்டி 07132) கொல்லத்தில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்