காவலாளி வீட்டில் 4 பவுன் நகை-டி.வி. திருட்டு

காவலாளி வீட்டில் 4 பவுன் நகை-டி.வி. திருட்டு போனது.

Update: 2023-01-27 20:56 GMT

முசிறி:

முசிறி அருகே உள்ள சிட்டிலரை கவுண்டர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன்(வயது 63). இவர் சேருகுடி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அவரது மனைவி கரூரில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலையில் பாண்டியன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த எல்.இ.டி. டி.வி. மற்றும் டி.வி.யின் பின்புறம் வைத்திருந்த 4 பவுன் தாலிக்கொடி ஆகியவை திருட்டு போயிருந்தது. இது பற்றி அவர் அளித்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் திருச்சியில் இருந்து மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்