மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்ராம். இவருடைய மனைவி வாணி ஜமுனா(வயது 46). இவர் மதுரையில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கல்லூரி முடித்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தல்லாகுளம் பேச்சிக்குளம் சாலையில் வந்தபோது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.