மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-28 19:18 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 61). இவர் தனது மகனை பார்ப்பதற்காக வி.சாத்தமங்கலம் கிராமத்திற்கு சென்றார். அங்கு மகளை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கோவிலூருக்கு செல்வதற்காக அரசு பஸ் ஒன்றில் அவர் ஏற முயன்றார். அப்போது அங்கிருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி் மர்மநபர் ஒருவர் அய்யம்மாள் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

வலைவீச்சு

இதையடுத்து சக பயணிகள் அந்த மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவானார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்