(செய்தி சிதறல்) ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு

திருச்சியில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-03-14 18:53 GMT

திருச்சியில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சங்கிலி திருட்டு

திருச்சி உறையூர்ரோடு கீதாநகரை சேர்ந்தவர் ரமாதேவி (வயது 60). இவர் நேற்று முன்தினம் புத்தூர் நால்ரோட்டில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தாக்குதல்

* திருச்சி கருவாட்டுப்பேட்டை காமராஜ்நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). இவர் சம்பவத்தன்று இ.பி.ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது செந்தில்குமாரின் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் (46) குடிபோதையில் வந்து செந்தில்குமாரை தாக்கினார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

திருட முயன்றவர் கைது

* திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்காநகரில் வசித்து வருபவர் டேனியல் (48). இவர் நேற்று முன்தினம் சத்திரம் பஸ் நிலையத்தில் நின்ற டவுன் பஸ்சில் ஏறினார். அப்போது தென்னூர் ஆழ்வார்தோப்பு அடுத்த அண்ணாநகரை சேர்ந்த ஷேக் தாவூத் (38) டேனியலின் சட்டைப்பையில் இருந்த பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த கண்டோன்மெண்ட் போலீசார் ஷேக் தாவூத்தை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

* துவாக்குடி வாழவந்தான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழன் (55). இவர் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகில் நிறுத்திவிட்டு சென்றாா். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர் கைது

* திருச்சி பாலக்கரை போலீசார் பீமநகர் கூனிபஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கொரிமேடை சேர்ந்த திருப்புட்டான் என்கிற அருண்குமாரை (30) கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆசிரியர் திடீர் சாவு

*திருச்சி ராம்ஜிநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள பள்ளியில் இசை ஆசிரியராக சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் சுதர்சன் குளித்து கொண்டு இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்