பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுக்கோட்டையை சேர்ந்த கணேசனின் மனைவி சாந்தி (வயது 53). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார். இந்த நிலையில் கோவில் முன்பு சாந்தியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை மர்ம ஆசாமி பறித்து சென்றார். இதுதொடர்பாக சாந்தி அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.