கோர்ட்டு பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே கோர்ட்டு பெண் ஊழியரிடம் 4 பவுன் சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-23 18:00 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ராகவன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரின் மனைவி சித்ரா (வயது 48). இவர், திருப்பத்தூர் கோர்ட்டில் தட்டச்சராக பணியாற்றி வருகிறார். இவர், கோர்ட்டு அலுவலக பணிகளை முடித்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

ஜோலார்பேட்டையை அடுத்த லாரி ஷெட் அருகே கட்டேரி ரெயில்வே தரைப்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும்போது அந்த வழியாக எதிரே மோட்டார்சைக்கிளில் எதிரே வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 ேபர் சித்ராவின் ெமாபட்டை மோதுவது போல் வந்து, அவரின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து சென்றனர். அப்போது சித்ரா கூச்சல் போடவே வழிப்பறி கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்