ஓடும் பஸ்சில் பெண்ணின் 4 பவுன் சங்கிலி அபேஸ்
ஆரல்வாய்மொழியில் ஓடும் பஸ்சில் பெண்ணின் 4 பவுன் சங்கிலி அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் ஓடும் பஸ்சில் பெண்ணின் 4 பவுன் சங்கிலி அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி நீலாவதி (வயது 57). இவர் நேற்று காலையில் தோவாளைக்கு டவுண் பஸ்சில் சென்றார். அப்ேபாது தோவாளையில் பஸ்சில் இருந்து இறங்கியபோது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அதன்பிறகு தான் பஸ்சில் கூட்டத்தை பயன்படுத்தி யாரோ மர்மநபர் சங்கிலியை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து நீலாவதி ஆரல்வாய்மொழி போலிசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.