வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வமேஸ்வர் பணிபட்டர், கணேஷ் தெகுரி, அமல் சிகாரி, திலீப் குண்டா ஆகிய 4 பேரும் வேலை செய்து வருகிறார்கள். அருகில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் வேலை செய்து வருகிறார்கள் .
இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் நால்வரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களை ஜாடையாக பேசியதாக தெரிகிறது. அதை விசாரிக்க சென்ற மேலாளர் தீனதயாளன், ஊழியர் வேல்முருகன் ஆகிய இருவரையும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 பேரும் கட்டையால் தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன், 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.