லாட்டரி விற்ற 4 பேர் சிக்கினர்

லாட்டரி விற்ற 4 பேர் சிக்கினர்

Update: 2022-12-24 19:15 GMT

சாத்தூர்

சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் சாத்தூர் நகர் சப்-இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி மற்றும் பாண்டியன் ஆகியோர் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி வெள்ளைக்கரை ரோடு, வெங்கடாசலபுரம் பஸ் ஸ்டாப், வடக்கு ரத வீதி, பழையபடந்தால் ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்த முருகதாஸ்(வயது 54), மீரான்மைதீன் (49), குருசாமி (48), செல்வராஜ் (53) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 25-க்கும் மேற்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்