மரத்தில் கார் மோதியதில் 4 பேர் படுகாயம்

மரத்தில் கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-09 17:18 GMT

கீழ்பென்னாத்தூர்

மரத்தில் கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம்மாவட்டம்வி.மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன். அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் ஜெயராமன், சுரேஷ், விக்னேஷ். இவர்கள் காரில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் கோவிந்தராஜன் ஓட்டினார். நல்லான்பிள்ளை பெற்றாள் பகுதியில் இரவு 11.45 மணியளவில் சென்றபோது சாலையோர புளிய மரத்தில் கார் மோதியது. இதில் டிரைவர் கோவிந்தராஜன் மற்றும் காரில் இருந்த ஜெயராமன், சுரேஷ், விக்னேஷ் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்