வெறிநாய் கடித்து 4 பேர் காயம்

திண்டிவனம் அருகே வெறிநாய் கடித்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-07-27 20:39 GMT

திண்டிவனம்,

திண்டிவனம் அருகே கீழ்ஆதனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 38). இவர் அங்குள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது வெறிநாய் ஒன்று அவரை கடித்தது. இதைபார்த்த அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (19) என்பவர் ராஜீவ்காந்தியை காப்பாற்ற அந்த நாயை துரத்தினார். அப்போது அந்த நாய் அவரையும் கடித்தது. தொடர்ந்து அஞ்சலாட்சி என்பவரின் மகன் சரவணன் (4) என்கிற சிறுவனையும் அதை தடுக்க முயன்ற அஞ்சலாட்சியையும் அந்த நாய் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த இளவரசன் உள்பட 4 பேரும் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அஞ்சலாட்சி மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்