பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்

கடமலைக்குண்டுவில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-20 18:45 GMT

கடமலைக்குண்டு பஸ் நிலைய பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடமலைக்குண்டு போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 34), முத்துக்குமார் (32), உதயகுமார் (28), கருத்தன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்